கல்வெட்டில் கிடாவெட்டு:
பட்டிகளில் அடைக்கப்படும் நூற்றுக்கணக்கான ஆடுகள் பல்கி பெருகவும், அவ்வினங்கள் நோய்நொடியின்றி இருக்கவும், அந்த பட்டியிலிருந்து ஒரு கிடாக்குட்டியை தேர்ந்தெடுத்து தத்தம் குலதெய்வங்களுக்கு நேர்ந்துவிடுவர். பின் அக்கிடாக்குட்டி பெரிதானவுடன், அதற்கு ஒருநாள் குறித்து பலியிடுவர். உயிர்பலியிடும் இந்நிகழ்வு குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளில் பயின்று வருகிறது. அதுகுறித்து காண்போம். புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரில் கி.பி 1407 ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று, பொன்னன் கோவன் அழும்பன் என்பவர் அவ்வூரில் சக்தி திருவிழாவிற்காக வண்டி வண்டியாய் கிடாக்களை ஏற்றி வந்து, அவற்றை சந்து சந்திகளில் பலியிட்டுள்ளான். கலங்காத இவனது மனதை கண்ட ஊரார் இவருக்கு "கலங்காத கண்டக்கோன்" எனும் பட்டமளித்துள்ளனர்.
அதே புதுக்கோட்டையை சேர்ந்த 1628 ம் ஆண்டு ராங்கியம் கல்வெட்டு ஒன்று அங்குள்ள பிடாரி கோவிலில் கிடாய் பலியிட்ட செய்தியை கூறுகிறது.




அய்யா வணக்கம். "கடவுளின் "
ReplyDeleteகுழந்தைகளான வாயில்லாப் பிராணிகளை பலி கொடுப்பதை நிறுத்திட பலி நிகழும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அகிம்சையை விளக்கி மன்றாடி உயிர்ப்பலியை 20 ஆம் நிறுத்திய ஒரு மனிதர் ஜீவபந்து என அழைக்கப் பட்ட ஸ்ரீபால் அய்யா அவர்கள் .20 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் நடந்த அதிசயம் இது.
அவர் பெருமுயற்சியால் உயிர்பலி தடை சட்டம் இயற்றப்பட்டது. மன்னிக்கவும். பலி ஙொட்த்தல்பற்றிய பதிவ இருந்ததால் இதைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று தகவலுக்காக.
✍️ nice
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி
Delete