Friday, 28 May 2021

ஐஞ்நூற்றுவன்_குளம்

 ஐஞ்நூற்றுவன்_குளம்


பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் சாலையோரத்தில் சுடுகாட்டின் எதிரில் உள்ள பாறைக்கல்லில் ஒரு கல்வெட்டுள்ளது. அஃது


" ஐஞ்நூ

  ற்றுவன் 

  குளம்"


என்று எழுதப்பட்டுள்ளது. இது வணிகக்குழுக் கல்வெட்டாகும். தென்னிந்திய வணிகக் குழுக்களுள் ஒன்றான "ஐயபொழில்" குழுவினரின் கல்வெட்டு இது. ஐயபொழில் குழு "ஐயபொழில் ஐஞ்நூற்றுவர்" என்றும் கூறப்படுவதுண்டு. இவ்வணிகக் குழுவினர் அறக்கொடைகளில் ஒன்று நீர்நிலைகளை அமைத்தல். இக்குழுவைச் சேர்ந்த 'ஐஞ்நூற்றுவன்' என்பவர் பொழிச்சலூரில் ஒரு குளம் தோண்டுவித்து அதற்கு "ஐஞ்நூற்றுவன் குளம்" எனப் பெயரும் பொறித்துள்ளார். இவர் அவ்வணிகக் குழுவைச் சேர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக இப்பாறையில் வணிகக் குழுவின் சின்னங்களான குத்துவிளக்குகள், கலப்பை, குறுவாள், பசும்பை ஆகியன கல்வெட்டின் இருபுறமும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதியை நோக்க இக்கல்வெட்டு கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருத இடமுள்ளது.


நன்றி:


அன்பு வந்தியத்தேவன் 

கண்ணன் வெங்கடேசன்.




Tuesday, 25 May 2021

சாத்தூர் மடைக்கல்வெட்டு

 இடம் : சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம்,  


தற்போது கல்வெட்டு பாதுகாக்கப்படும் இடம் : திருமலை நாயக்கர் மண்டபம், மதுரை


காலம்  :  9ம் நூற்றாண்டு 

செய்தி :  வட்டெழுத்து (தமிழ்) கல்வெட்டுச்செய்தி : சாத்தூர் மடைக்கல்வெட்டு இவ்வூரின் பழமையை எடுத்துக்காட்டுகிறது. நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சாத்தூர் குளத்தில் மடைகள் அமைக்கப்பட்டு நீர் நிருவாகம் முறையாகச் செய்யப்பட்டிருந்தது. அவை காலப்போக்கில் தொடர் பராமரிப்பின்மையால் அழிவுற்றன. இதனைக் கண்ணுற்ற இருப்பைக்குடிக்கிழவன் கி.பி.825-இல் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தில் சிதைந்த மடைகளை அகற்றிவிட்டு கல்மடைகளை அமைத்து குளத்தைச் சீர்திருத்தினான். இச்செய்தியினை சடையன்மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டுடொன்று தெரிவிக்கின்றது.

 

தகவல்: தமிழக அரசுத்தொல்லியல் துறை


படம்: மோ.பிரசன்னா , திருநெல்வேலி தொல்லியல் கழகம்.





Friday, 7 May 2021

திருவெள்ளரை philosophy கல்வெட்டு

 திருவெள்ளரை philosophy கல்வெட்டு:


யார்யாருக்கு தான் பாதிப்பு வரும்னு ஒரு கணக்கில்லாம எல்லாரையும் கொரோனா தாக்கிட்டு இருக்கு. எவ்வளவோ வசதி இருந்தும் காப்பாற்றமுடியாம மத்திய அமைச்சர், தொழிலதிபர்கள் நடுத்தர வர்க்கம்னு வித்தியாசமில்லாம தாக்குது. எனக்கு தெரிஞ்சவங்களே நிறைய பேர் போய் சேர்ந்துட்டாங்க. எனவே எல்லோரோடையும் சண்டை சச்சரவு இல்லாம Friendship maintain பண்ணுவோம், வாழ்க்கையை Enjoy பண்ணுவோம்.

இன்னிக்கு சரியா 1200 வருஷம் முன்னால திருச்சி மாவட்டம் திருவெள்ளரை கல்வெட்டு இதேபோன்ற ஒருதத்துவத்தை தருகின்றது அதனை காண்போம்.


கல்வெட்டு:


 ஸ்ரீ கண்டார் காணார் உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாதேய்

தண்டார் மூப்பு வந்துன்னை-த்தளரச்செய்து நில்லாமுன் உண்டேல் உண்டு மிக்குது உலகமும் அறைய வைமிந்நேய்


இந்த செய்யுளின் பொருளாவது :


நேற்று ஒருவனைக் கண்டேன். இன்றோ அவனைக் காணமுடியவில்லை. இறந்துவிட்டான். அத்தகைய நிலையாமையுடைய இவ்வுலகத்தில் அனைத்தின் மீதும் ஆசைகொண்டு நிற்காதீர்கள். அன்றொரு நாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் நட்சத்திரம் சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம் வருத்தப்பட்டு நைந்து போகாதீர்கள். வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன் பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை இந்த உலகம் நன்மைபெற மனம் உவந்து அளியுங்கள்.