Friday, 7 May 2021

திருவெள்ளரை philosophy கல்வெட்டு

 திருவெள்ளரை philosophy கல்வெட்டு:


யார்யாருக்கு தான் பாதிப்பு வரும்னு ஒரு கணக்கில்லாம எல்லாரையும் கொரோனா தாக்கிட்டு இருக்கு. எவ்வளவோ வசதி இருந்தும் காப்பாற்றமுடியாம மத்திய அமைச்சர், தொழிலதிபர்கள் நடுத்தர வர்க்கம்னு வித்தியாசமில்லாம தாக்குது. எனக்கு தெரிஞ்சவங்களே நிறைய பேர் போய் சேர்ந்துட்டாங்க. எனவே எல்லோரோடையும் சண்டை சச்சரவு இல்லாம Friendship maintain பண்ணுவோம், வாழ்க்கையை Enjoy பண்ணுவோம்.

இன்னிக்கு சரியா 1200 வருஷம் முன்னால திருச்சி மாவட்டம் திருவெள்ளரை கல்வெட்டு இதேபோன்ற ஒருதத்துவத்தை தருகின்றது அதனை காண்போம்.


கல்வெட்டு:


 ஸ்ரீ கண்டார் காணார் உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாதேய்

தண்டார் மூப்பு வந்துன்னை-த்தளரச்செய்து நில்லாமுன் உண்டேல் உண்டு மிக்குது உலகமும் அறைய வைமிந்நேய்


இந்த செய்யுளின் பொருளாவது :


நேற்று ஒருவனைக் கண்டேன். இன்றோ அவனைக் காணமுடியவில்லை. இறந்துவிட்டான். அத்தகைய நிலையாமையுடைய இவ்வுலகத்தில் அனைத்தின் மீதும் ஆசைகொண்டு நிற்காதீர்கள். அன்றொரு நாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் நட்சத்திரம் சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம் வருத்தப்பட்டு நைந்து போகாதீர்கள். வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன் பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை இந்த உலகம் நன்மைபெற மனம் உவந்து அளியுங்கள்.




No comments:

Post a Comment