கர்நாடாவில் கல்வெட்டு பொறித்த தமிழன்:
நாமக்கல்-சேலம் சாலையில் உள்ளது ஏழூர். அப்பர் பாடிய வைப்புத்தலங்களில் இவ்வூர் கோவிலும் ஒன்று. இவ்வூரிலிருந்து ஓர் தச்சன் கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்திலுள்ள தமுட்டுகல் எனும் கிராமத்திற்கு சென்று கன்னட மற்றும் வடமொழி கல்வெட்டு ஒன்றினை வெட்டிக் கொடுத்துள்ளார். அந்த கல்வெட்டின் இடப்புற விளிம்பில் தனது பெயரையும் வட்டெழுத்தில் பொறித்துவிட்டு வந்துள்ளார் இந்த தச்சன்,
"ஏழூர் மோநலஞ் சாத்தன்" என்பது இந்த தச்சரின் பெயராகும். இக்கல்வெட்டு 5 ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment